writer movie release date announced

Advertisment

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித், பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அதனைத்தொடர்ந்து, தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற படத்தையும் தயாரித்து வெற்றி கண்டார். இதனை தொடர்ந்து சமுத்திரக்கனி நடிக்கும் 'ரைட்டர்' படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்து வருகிறார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="b0f597e5-3731-416c-92e6-ff9ce3508e95" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_43.jpg" />

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சமுத்திரக்கனி போலீசாக நடித்துள்ள ரைட்டர் திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இயக்குநர் பா.ரஞ்சித் தனதுட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment